கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.
24 மணி நேரத்தில் ஒன்ராறியோவில் பதிவான கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60.
நேற்றைய (ஞாயிறு) நிலவரப்படி, ஒன்ராறியோ உள்ளூர் சுகாதார அமைப்புகள் அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி இதுவரை 21,303 கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,709.
கடந்த சில வாரங்களாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வரும் அதே நேரத்தில், புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மெதுவாக குறையத் தொடங்கியுள்ளதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ரொரன்றோ பல்கலைக்கழக இணை பேராசிரியரான Dr. Susan J. Bondy, சமீபத்திய மரணங்களின் எண்ணிக்கை, கடந்த காலத்தில் புதிதாக எத்தனை பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதை காட்டுவதுதான், இந்த உயிரிழப்பு அதிகரிப்புக்கும், நோய்த்தொற்று குறைவுக்கும் காரணம் என்கிறார்.
14 நாட்களுக்கு முன், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகமாக இருந்தது, ஆகவே உயிரிழப்புக்களின்
எண்ணிக்கையும் அதை பின்தொடர்ந்தே இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும் என்கிறார் அவர்.
ஏப்ரலிலிருந்து கணக்கிட்டால், சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையான 334, இதுவரை உள்ளதிலேயே குறைவானதாகும். ஏப்ரலில் அது சற்றேறக்குறைய 5,000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.