உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்துவதற்காக கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு விண்ணப்பதாரிக்கு 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும், என்பதோடு அவற்றை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.