த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுமந்திரன் வெளியிட்ட கருத்தானது, தமது உறவுகளின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த பல ஆயிரம் மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தும்படியாக இருப்பதாகத் தெரிவிக்கும், புலம்பெயர் தமிழ் மக்கள், சுமந்திரனை த.தே.கூட்டமைப்பை விட்டு வெளியேற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.