ஸ்ரீலங்காவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.
கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கடற்படை சிப்பாய்மார் 6 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து 343 பேர் வெளியேறியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பொது மக்கள் அனைவரும் சுகாதார விழுமியங்களை கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.