தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை.
நான் ஒரு அஹிம்சாவாதி, ஆயுதப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவது எப்படி மன்னிக்க முடியாத குற்றமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே சுமந்திரன் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நான் வன்முறைக்கும், ஆயுதத்துக்கும் எதிரானவன் என்றுதான் கூறினேன். மாறாக விடுதலைப்புலிகளைப்பற்றி நான் விமர்சிக்கவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் தவறென்று நான் ஒருபோதும் கூறியதில்லை.
புலிகளின் தியாகங்களை வெறும் வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது.
அந்தத் தியாகங்களை நான் ஒருபோதும் வாக்கு சேகரிப்புக்காக பயன்படுத்தப்போவதில்லை, பயன்படுத்தியதும் இல்லை. என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.