நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் பிளேயரான, மதியாஸ் போய் என்பவரை காதலிப்பது தெரியவந்திருக்கிறது.
தனது குடும்பத்தினருக்கு தன் காதலரை தெரியும் என்றும், ஒருவேளை இந்த உறவை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இது ஒர்க் அவுட் ஆகாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
அது மட்டும் இன்றி, நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருப்பதை ஏற்றுக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
ஆனால் அதே நேரத்தில், அதை பற்றி மட்டுமே பேசி தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.
ஏனென்றால் அது, நான் நடிகையாக இத்தனை வருடங்களில் செய்த கடின உழைப்பை மறைத்துவிடும். எனவே என்னால் அப்படி செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான தகவல் தான் .
இதனைத் தொடர்ந்து காதலருடன் டாப்சி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.