அடுத்த தேசியத் தலைவர் ரேஞ்சுக்கு பந்தா காட்டுபவர்தான் சிறிதரன். மாவீரர் தினத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றும் அளவுக்கு தன்னை ஒரு ஆயுதம் ஏந்தாத தளபதியாக அடையாளப்படுத்திக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் வலம் வந்துகொண்டு இருப்பவர்தான் சிறிதரன்.
ஆனால், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அண்மையில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு இதுவரை சிறிதரன் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கது.
இலங்கையில் உள்ள அத்தனை தமிழ் தலைவர்களுமே சுமந்திரனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், எடுத்ததற்கெல்லாம் அறிக்கைவிட்டு வீரம் காண்பிக்கின்ற சிறிதரன் மாத்திரம் எதற்காக அமைதிகாக்கின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் தமிழ் மக்கள்.
சிறிதரனை வெறும் அரசியல்வாதியாகவே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட தமிழ் மக்கள், அவர் ஒரு ‘கணக்கு வாத்தி’ என்பதை மறந்துவிட்டதாலேயே இந்தக் கேள்வியை எழுப்புகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு கிடைக்கும் வாக்குகளின் இரண்டாம் தெரிவு தனக்கு கிடைக்கவேண்டும் என்று கணக்கிட்டே அவர் அமைதி காப்பதாக கணக்கு தெரிந்த வேறு சிலர் தெரிவிக்கின்றார்கள்.
வாக்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக சுமந்திரன் கூறிய கருத்துப் பற்றிய சிறிதரனின் நிலைப்பாடு என்ன?
சிறிதரன் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுக்கொள்கின்றாரா?
சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிறிதரனும் வந்துவிட்டாரா?
கொஞ்சம் வெளிப்படையாக சிறிதரன் இவற்றைக் கூறிவிட்டால் நாங்கள் ஏன் அவர் வம்புக்கு வருகிறோம்.
வாயைத் திறந்து எதையாவது பேசித் தொலையுங்கள் வாதியாரே!!
என வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் அனந்தநடராசா லீலாதேவி தெரிவித்துள்ளார்.