இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை பாவனையாளர்களுக்கான மாதாந்த மின்சார கட்டணபட்டியலை வழங்கவும், கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்தும். மின்சார கட்டண பட்டியல்களை வழங்குவதில் தாமதம் இருந்தபோதிலும், சலுகை விகிதத்தில் பாவிக்கப்பட்ட அலகுகளின் எண்ணிக்கை (விகிதாசார முறையின்படி) இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவற்றால் சில பாவனையாளர்களின் முறைப்பாடுகளுடன் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த காலத்தில் மின்சார கட்டண பட்டியல் பெறப்படாவிட்டாலும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை மின்சார பாவனையாளர்களுக்கான மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எதிர்காலத்தில் தொடர்ச்சியான தடையற்ற, தரமான மின்சார சேவையை வழங்க இந்த நிறுவனங்களின் நிதி நிலையை மீட்டெடுக்க வேண்டும். இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) அதன் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பல மாதங்களாக வழங்கப்பட்ட மின் கட்டணங்களை உடனடியாக பணம் செலுத்துவதன் மூலம் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவற்றின் பாவனையாளர்களுக்கு அவற்றின் நிதி நிலையை சிறப்பாக பராமரிக்க உதவ முடியும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.
ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த காலத்தில் மின்சார பாவனையாளர்கள் தங்கள் மின்சார கட்டண பட்டியலைத் தயாரிக்கும்போது அதிகபட்ச சலுகையை உறுதி செய்வதற்காக தங்கள் மின்சார கட்டண பட்டியலைத் தயாரிப்பது, கணக்கிடுவது தொடர்பாக பின்வரும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுகின்றன.
- தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றும் மின்மானி வாசிப்பின் பின்னர் வழங்கப்படும் அனைத்து மின் பட்டியல்களும் கடந்த காலங்களை போன்று மாத அடிப்படையில் அல்லது சலுகை மின் கட்டண உரிமை (விகிதாசார அமைப்பு அடிப்படையில்) உறுதிசெய்யப்பட்டு அந்தந்த மாதங்களுக்கென வெவ்வேறான மின் பட்டியலாக வழங்கப்படும்.
- அவ்வாறாக தனித் தனியாக வழங்கப்படும் மின் பட்டியல்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் காலம் குறித்து இ.மி.ச. மற்றும் லெகோ-வினால் பகிரங்கப்படுத்தப்பட்டு மின்சார பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்படும். அதற்கேற்ப குறித்த சலுகைக் காலம் மற்றும் விதிமுறைகள் அறிவிக்கப்படும் வரை இந்த மின் கட்டணங்களை செலுத்தாமை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது.
- இறுதி மின்மானி வாசிப்பு மற்றும் அடுத்த மின்மானி வசிப்பு இரண்டிற்கும் இடையிலான கால இடைவெளி ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்டதாக அமையக்கூடும். அதற்கேற்ப அக்காலத்திற்கான மின் பாவனை (மின்சார அலகுகளின் எண்ணிக்கை) சம காலத்திற்கேற்ப அலகுகள் சமமாக பிரிக்கப்படும் வகையில் (விகிதாசார முறை அல்லது சலுகை மின்சார கட்டண உரிமையை உறுதிப்படுத்தி) மின் பட்டியல்கள் தயாரிக்கப்படும். அதன்போது சில மாதங்களாக பாவனையாளரால் நுகரப்பட்ட மொத்த மின்சார அலகுகளை அந்தந்த மாதங்களுக்கென அண்மித்த வகையில் பிரித்து அனைவருக்கும் சாதாரணமாக அமையும் வகையில் மின் பட்டியல்களை தயாரிக்க முடியும். இதற்கிடையில்; சில பாவனையாளர்களுக்கு இதுவரை மின்வாசிப்பற்ற மதிப்பிடப்பட்ட மின் பட்டியல் கிடைக்கப் பெற்றிருக்கும். இந்த மதிப்பிடப்பட்ட மின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மின் அலகுகளின் எண்ணிக்கை மற்றும் மின் வாசிப்பின் பின்னர் வழங்கப்படும் மின் பட்டியலிலுள்ள அலகுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படின் அந்த வித்தியாசம் அடுத்த மின் வாசிப்பின் பின்னர் திருத்தப்படும். அவ்வாறான திருத்தங்கள் காணப்படுமாயின் மாத்திரம் எதிர்வரும் மின் பட்டியல்களில் அது சேர்க்கப்பட்டு அத்திருத்தங்கள் தொடர்பாக பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
- வழங்கப்பட்டுள்ள மின் பட்டியல் அல்லது எதிர்வரும் காலத்தில் வழங்கப்படவுள்ள மின் பட்டியல் தொடர்பாக முறைபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் அந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்படமாட்டாது. இ.மி.ச. மற்றும் லெகோ -வினால் அந்த பாவனையாளர் முறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும். மின் பட்டியல் குறித்த முறைபாடுகள் தொடர்பில் கிடைக்கும் தீர்வுக்கு உடன்படாத பட்சத்தில் பாவனையாளர் தம் பிரச்சினை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.
சலுகை மின் அலகு உரிமையை உறுதிபடுத்தும் விகிதார முறைக்கான உதாரணம்