கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை உணர்ந்து வகையில் ஜப்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
buffet உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோ, என்.ஹச்.ஏ சுகாதார நிபுணர்கள் வைரஸ் பரவலை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த வீடியோவில், 10 நபர்கள் உள்ளே வருகின்றனர். அதில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். அவர் அதை கருத்தில் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுகிறார்.
அவர், ஒவ்வொன்றாக தொட்டு எடுக்கிறார். அவருடன் இருப்பவர்களும் அதனை தொடுகின்றனர்.
இறுதியில் நீல ஒளி விளக்கில் அவர்கள் உடலில் வைரஸ் இருப்பது போன்று காட்டப்படுகிறது. அதன்பின் ஒவ்வொருவரும் தங்கள் கண், மூக்கை தொடுகின்றனர்
இவ்வாறு அந்த வீடியோவில், வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.