முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணையை மீள் பரிசீலனை செய்து அவரை கைது செய்தமைக்கான காரணம் என்ன? அரசாங்கம் எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் மீதான அடக்குமுறையை பிரயோகித்து வருகின்றது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, தான் குற்றம் செய்துள்ளமையை அறிந்திருந்தும் சட்டத்தின் முன் ஓடிமறைந்துக் கொள்ளும் நபர்களுக்கு மத்தியில் ராஜித்தவுக்கு மறைந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், தங்களது பலத்தை தக்கவைத்துக் கொள்ளவதை நோக்காக கொண்டு செயற்படுபவர்கள், பொதுத் தேர்தலை நடத்துவதற்காக சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் சுகாதார அமைச்சிக்கு ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியொருவரை நியமித்துள்ளாதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் விமானங்கள் கொள்வளவு போன்ற மோசடிpகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் மீள் பரிசோதனை செய்யாமல், ஊடக கலந்துரையாடல் தொடர்பில் ராஜித்தவுக்கு வழங்கப்பட்ட பிணையை பரிசீலனை செயது அவரை கைது செய்வதற்காக எடுத்துள்ள தீர்மானம் அரசியல் பழிவாங்கல் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜித்தவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசதரப்பினர் பெரிதும் விமர்சித்தனர்.
ஆனால் தாம் குற்றம் செய்துள்ளதை உணர்ந்தும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல், வெளிநாடுகளுக்குச் சென்று மறைந்து வாழ்பவர்கள் மத்தியில் ராஜித்தவுக்கு அவ்வாறு மறைந்து வாழவேண்டிய அவசியமில்லை. அவருக்கு உடலில் எந்த குறைப்பாடும் இல்லாமல் எதற்காக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.
அரசாங்கம் தேர்தலில் தோல்வியடைய நேரிடுமோ என்ற அச்சத்தில் தற்போது அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தலை நடத்தும் திட்டத்தில், அதற்கான அனுமதியை சுகாதார அமைச்சி வழங்க வேண்டும் என்பதற்காக சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியை நியமித்துள்ளது.
சுகாதார பிரிவுக்கு ஏன் இராணுவத்தினரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமனம் வழங்க வேண்டும் என்றால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு அந்த பொறுப்பை வழங்கியிருக்கலாம். அவர் தற்போது பெறும் சேவையாற்றி வருகின்றார் அல்லவா? அதற்கு பதவிவுயர்வு வழங்குவதுபோல் செயலாளராக பதவிவுயர்திருக்கலாமே.
கொரோனா நெருக்கடியின் காரணமாக தொழில்வாய்ப்புகள் ஊதியங்கள் என்பவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் 5000ரூபாய் நிவாரண நிதியிலும் தேர்தால் இலாபத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது. தற்போது வழங்குவதாக கூறப்பட்ட இரண்டாம் சுற்று நிவாரண நிதி தேர்தல் திகதி நெருங்கியவுடனே வழங்கப்பட வாய்ப்பிருக்கின்றது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் தங்களது பங்குகளை கைப்பற்றும் நோக்கில் நெடுஞ்சாலை அமைப்பதற்காக 32 பில்லியன் ரூபாவை கடன் தொகையாக பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதிப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள முடியாத நிலையிலும் தொடர்ந்தும் அரசாங்கம் அரச நிதியை செலவிட்டு வருகின்றமையினால், நிதி அமைச்சின் செயலாளரும் பதவிவிலக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர்கள் தேர்தலின் பின்னரும் காலத்தின் காலமும் மாறுவார்கள். ஆனால் இந்த அமைச்சில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் நிர்வாகப்பிரிவினரே பொறுப்புக் கூற வேண்டும்.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டினால் அரசாங்கத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய யோசனைகளுக்காகவும் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க எதிர்தரப்பில் அனைவரும் தயாராக இருப்பதுடன், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துருவில் அறிக்கையும் அனுப்பிவைத்துள்ளோம்.
எமதுஆட்சிக்காலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அப்போதிருந்த ஊடகசுதந்திரம் மற்றும் சுகாதார சேவைக்கா வழங்கப்பட்டிருந்த முன்னுரிமைக்கு மத்தியில் உரிய முறையில் முகாமைத்துவம் செய்து கொண்டிருப்போம். எமது ஆட்சிக்காலத்தில் சுகாதார பிரிவுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதியின் பிரகாரமே தற்போது இந்தளவிலாவது வைரஸ் பரவலை முகாமைத்துவம் செய்துகொள்ள முடிந்துள்ளது.