ஸ்ரீலங்காவில் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சில பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன.
குறித்த பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்பட்டு இருந்தன.
எனினும் அவை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகளே இவ்வாறு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்ளபதி தெரிவித்துள்ளார்.