ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் புதிதாக 10 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.
நேற்று மாலை ஒருவரும், இரவு ஒன்பது பேர் என 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.
இவர்களில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர்.
ஏனைய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரின் உறவினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 925ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.