இரத்தக்குழாய் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை, இன்று கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றியுள்ளார் இன்னொரு மருத்துவர்.
1999ஆம் ஆண்டு, இரத்தக்குழாய் ஒன்றில் திடீரென அடைப்பு ஏற்பட்டு மரணத்தருவாயிலிருந்த ஷாகில் ரஹ்மானுக்கு அதிக கஷ்டம் கொடுக்காமல் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார் இதய சிகிச்சை நிபுணரான Dr. சந்திரா என்று அழைக்கப்படும் வெங்கடாச்சலம் சந்திரசேகரன்.
இந்நிலையில், Dr. சந்திராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட, தற்போது பிரித்தானியாவிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை சுவாசவியல் நிபுணராக பணியாற்றும் ஷாகில் ரஹ்மான், தானே தான் பணி புரியும் மருத்துவமனையில் அவரை அனுமதித்து, தனது சகாக்களுடன் அவருக்கு சிகிச்சையளித்து கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன் தன் உயிரைக் காப்பாற்றிய தனது மூத்த மருத்துவருக்கு, ஏற்ற வேளையில் உதவ முடிந்ததற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் Dr.ஷாகில்.
கொரோனா சிகிச்சைக்குப் பின் சுகமடைந்து நல்லபடியாக வீடு திரும்பியதைப் பார்த்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்கிறார் Dr.ஷாகில்.