இந்தியாவில் குழாயில் தண்ணீர் பிடிக்க போன இளைஞரை, இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சேர்ந்து சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய நிலையில் அவமானத்தில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள சஜோர் என்ற கிராமத்தில் வசித்து வந்த விகாஸ் ஷர்மா (19) என்ற இளைஞர் கோவிலுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காக தெருவில் உள்ள கைப்பம்பு இருக்கும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.
கையில் கொண்டு போன குடத்தை பம்ப் அடியில் வைத்துவிட்டு, குழாயில் தண்ணீர் அடித்து கொண்டிருந்தார். அந்த சமயம், மனோஜ் கோலி என்பவர் தனது சகோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்தார். அப்போது மனோஜ் கோலியின் குடத்தில் தண்ணீர் பட்டுவிட்டதாக தெரிகிறது.
Heart Breaking ☹️.. RIP Vikash#JusticeForVikashSharma #JusticeforVikash pic.twitter.com/6HP78R6wVC
— CORONA WARRIOR MAYANK CHAUDHARY (@IamMayank_) May 15, 2020
இதனால் கோபமடைந்த மூவரும் விகாஸின் தலைமுடியை தரதரவென இழுத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விகாஸ் ஷர்மா வைத்திருந்த குடத்தில் சிறுநீரை நிரப்பி அதை குடிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த விகாஸ் ஷர்மா வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து விலாவரியாக கடிதம் எழுதியதோடு வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.
வீடியோவில், என்னை மூவரும் சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தி அடித்தார்கள் என மூவரின் பெயரையும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதை ஆதாரமாக வைத்து பொலிசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இதனிடையில் விகாஸ் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 1 கோடி வழங்கவேண்டும் என அவர் சமூகத்தின் சார்பாக மாநில முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விகாஸின் தற்கொலை சம்பவம் மத்திய பிரதேசம் மட்டுமின்றி இந்திய நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து டுவிட்டரில் விகாஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் #JusticeForVikashSharma என்ற டேக் இந்தியளவில் முதலிடத்தில் டிரண்டிங்கானது.