கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை இத்தாலிய அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க ஆணையின் படி, மார்ச் 9 முதல் நடைமுறையில் உள்ள மக்களின் செயல்பாடுகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் படிப்படியாக தளர்த்துகிறது.
திங்கள்கிழமை முதல் மக்கள் வாழும் பகுதிக்குள் சுதந்திரமாக செல்ல அனுமதி வழங்கியுள்ளது மற்றும் ஜூன் 3 முதல் பிராந்தியங்களுக்கு இடையில் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஆணையின் ஜூன் 3 முதல் சர்வதேச பயணங்கள் மற்றும் வருகைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் சில வணிகங்கள் உட்பட மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதாரத்தின் துறைகளில் சமூக இடைவெளி விதிகள் செயல்படுத்தப்படுகின்றன.
அடுத்த வாரம் முதல் சில கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்களில் பிராத்தனையில் கலந்துகொள்ள மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.