யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கணவன் – மனைவியின் தகராற்றினை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சில காலமாக மனைவியைவிட்டு பிரிந்துவாழும் கணவன், இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார்.
இதன்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றுள்ளார்.
இதன்போதே மனைவியின் தங்கையை குறித்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியதாக தெரிவித்த கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.