வடமராட்சி நெல்லியடியில் திருமணம் செய்து இரண்டு மாதங்களான இளம் பெண் விபரீத முடிவால் மரணமடைந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கரவெட்டி நெல்லியடி பகுதியில் ரூபன் கிருஷ்ணசாந்தி 17 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் இந்த விபரீதமான முடிவு எடுத்து உயிர் இழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் மரண விசாரனைகள் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரனைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறு விடயங்களுக்கும் விபரீத முடிவுகளை எடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மனத்தைரியம் நம்மவர்களுக்கு அவசியமாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.