சீனாவை சேர்ந்த 26 வயது இளைஞர் முகக்கவசம் அணிந்த படி நீண்டதூரம் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முகக்கவசத்தை பல மணி நேரம் அணிந்திருப்பதும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில் சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சாங் பிங் என்பவர் முகக்கவசம் அணிந்த படி கடந்த ஒரு வாரமாக 6 கிலோமீற்றர் வரை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலியும் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதித்து பார்த்ததில் அவரது இடது நுரையீரலில் துளை உண்டாகியிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் அது சரி செய்யப்பட்டு தற்போது சாங் பிங் உயிர் பிழைத்துள்ளார்.
இதற்கான காரணம் குறித்து விவரித்த மருத்துவர்கள், ‘முகக்கவசம் அணிந்தபடி தினமும் 6 கிலோமீற்றர் நடைப்பயிற்சி சென்றதால் நுரையீரலுக்கு போதுமான ஒட்சிசன் கிடைக்காமல் கடும் அழுத்தம் ஏற்பட்டு இறுதியில் நுரையீரல் செயல்பாட்டையே பாதித்து விட்டது. கடுமையான உடற்பயிற்சியின் போது முகக்கவசத்தை தவிர்க்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.