மதுபான விருந்துபசாரத்தின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதால் சுத்தியலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்து மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை அரமனாகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றின் தங்குமிடத்தினுள் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மதுபான விருந்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுடன் தொடர்புடை நபர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் 33 மற்றும் 53 ஆகிய வயதுடைய கேகாலை மற்றும் ஹெட்டிப்பொல பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.