ரஷ்யாவில் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறிய நிலையில் தற்போது புதிய திருப்பமாக வேறு நபர் தான் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை என கூறி அதிரவைத்துள்ளார்.
ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் Ivan (10), இவனும் Darya (13) என்ற சிறுமியும் காதலித்த நிலையில் Darya கர்ப்பமானார்.
Ivan தான் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை என Darya கூறிய நிலையில் உலகம் முழுவதும் இந்த ஜோடி பெரும் வைரலானது.
மேலும் Ivanஐத் தவிர வேறு ஆண் நண்பர்கள் யாரும் தனக்கில்லை என்று தொலைக்காட்சியிலேயே அதிரடியாக அறிவித்திருந்தாள் Darya.
தற்போது 6 மாத கர்ப்பமாக Darya உள்ள நிலையில் இந்த விடயத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது Ivan தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தையில்லை என சிறுமி தற்போது கூறியுள்ளார்.
மேலும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும், உயரமாகவும் இருப்பவர் எனவும் அவருக்கு குறைந்தது 16 வயது இருக்கும் எனவும் Darya கூறியுள்ளார்.
தன்னை அந்த நபர் பலாத்காரம செய்ததாலேயே கர்ப்பமானதாக கூறியுள்ள Darya அந்த வலிமிகுந்த நிமிடத்தை இதற்கு மேல் விளக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த நபர் நான் படிக்கும் பள்ளியில் படிக்கவில்லை, ஆனால் நான் வசிக்கும் நகரில் தான் வசிக்கிறார்.
இது குறித்து பொலிசாருக்கு முழுமையான விளக்கத்துடன் புகார் கொடுத்துவிட்டேன், அவர்கள் இது தொடர்பில் விசாரிப்பார்கள்.
தற்போது அந்த நபரை பொலிசார் எதுவும் செய்யவில்லை, எனக்கு குழந்தை பிறந்த பின்னர் அதன் டி.என்.ஏவை வைத்து அந்த நபருடன் பரிசோதனை நடக்கும், பின்னர் அவர் மீது நடவடிக்கை பாயும் என கூறினார்.
ஆனால் இது தொடர்பாக பொலிசார் இன்னும் எதுவும் பேசவில்லை.
அதே சமயம் 10 வயது சிறுவன் Ivan உடன் Darya தொடர்ந்து காதலில் உள்ளார்.
தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ள Darya சிசேரின் மூல குழந்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.