தற்போது ஏற்பட்டுள்ள இயற்கையின் இடர் காலநிலையில், பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளைய தினம் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, குருநாகல், கண்டி மற்றும் குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையோடு அதிகளவான மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் குறித்த பத்து மாவட்டங்களுக்குமான மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளைய தினம் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



















