நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், வர்த்தமானி அறிவித்தல், சட்டம் ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெறும் காகித ஆவணங்களாக மாற்றியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூடும் என ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்ததாகவும் அந்த தினம் கடந்துள்ள நிலையில் அவரது அடுத்த நடவடிக்கை என்ன என்பதை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்ட திகதி கடந்துள்ள சூழ்நிலையில், புதிய நாடாளுமன்றத்தை கூட்டும் திகதியோ, தேர்தலை நடத்தும் திகதியோ உறுதியாக இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


















