பாரீஸ் நகரில் தமிழ் மக்களின் வியாபார மையம் என்று கூறப்படுகின்ற லாச்சப்பலில் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனின் உருவப்பொம்மை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
‘தமிழ் தேசியத்தின் துரோகி, சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழர்களாகிய நாம் எமது தார்மீக கோபத்தை வெளிப்படுத்துவோம்’ என்று எழுதப்பட்ட பதாதை ஒன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது.
பிரான்ஸ் தமிழ் தேசி பண்பாட்டுப் பேரவை மற்றும் தமிழ் விடுதலைக் கழுகுகள் போன்ற அமைப்புக்களின் ஆதரவாளர்கள் என்று அந்தப் பதாதையின் கீழே எழுதப்பட்டிருந்தது.