அமெரிக்காவில் 16 வயதுக்கும் குறைவான சிறுமியிடம் ஓன்லைனில் கவரும் வகையில் மோசமாக பேசி இரு முறை நேரில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நியூஜெர்சியை சேர்ந்தவர் Juan Aroldo Tomas (28). இவர் 16 வயதுக்கும் குறைவான சிறுமியிடம் ஓன்லைன் மூலம் நட்பாக பேசி கவர்ந்ததோடு அவரிடம் பாலியல் ரீதியான வெளிப்படையான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதை பின்னர் கடந்த 12ஆம் திகதி அந்த சிறுமியை இரண்டு இடங்களுக்கு வரவழைத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Juan-ஐ கைது செய்தார்கள்.
அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், சிறாரின் நலனுக்கு ஆபத்து விளைவிப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் Juan நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.