இந்தி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் மன்மீத் கிரிவால். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நடிப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், மன்மீத் கடன் பிரச்சினையால் பெருமளவில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அவரது படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டு பதறி அடித்து ஓடி வந்த அவரது மனைவி, அங்கு மன்மீத் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.