நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, இரத்தினபுரி, எலபத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயஹம, பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பொது மக்கள் விழிப்புடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மழை தொடர்ந்தால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் அனர்த்தம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்ததறை மாவட்டங்களில் 200 மில்லி மீற்றர் அளவில் மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையையும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை தொடர்மழை காரணமாக பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.




















