முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை சமத்துவக் கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முன்னாள் போராளி ஈழவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொது சுடரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தொடர்ந்தும் ஏனைய சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டு 2009 முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரலும் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அக கவணக்கம் செலுத்தப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மாலை அணிவித்து நினைவுகூரப்பட்டுள்ளது.





















