கொரோனா வைரஸ் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளை வரம்பிற்குள் மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய நாளை முதல் அதிக அவதானம் மற்றும் அவதானமிக்க பிரதேசங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களுக்கு இடையில் பேருந்து பயணிக்க அனுமதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பொது போக்குவரத்து சேவைகள் பணிகளுக்காக செல்லும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமைக்கமைய எதிர்வரும் நாட்களுக்குள் கொரோனா தொடர்பான சிறப்பான நிலைமை நாட்டினுள் காணப்பட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையை போன்று போக்குவரத்து சேவையினை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ரயில் போக்குவரத்து தொடர்பில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கமைய ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளும் அரச மற்றும் தனியார் பிரிவு அதிகாரிகள் வருகை தராமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பயணிகள் தாங்கள் பயணிப்பதற்காக பேருந்துகள் இல்லை என கூறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் பொது போக்குவரத்து சேவை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது அத்தியாவசிய சேவைக்காக மாவட்டங்களுக்குள் மாத்திரம் சேவை மேற்கொள்ளப்படுகின்றது.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்கு அல்லது வேறு மாவட்டங்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவு இன்னமும் அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கு சுகாதார பிரிவினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைக்கமைய மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
பொது போக்குவரத்து சேவை ஆரம்பித்தவுடன், இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஆசனங்களுக்கமைய மாத்திரம் போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்தின் போது முக கவசம் அணிவது கட்டாயமாகும். பேருந்திற்குள் கிருமி நாசி வைத்திருக்க வேண்டும்.
பயணிகள் நின்ற நிலையில் பயணிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படாது. அதற்கான சட்டங்களை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.