பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லை என்று கூறியிருந்த பிரித்தானியா, திடீரென தனது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது.
மே மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் இப்போதைக்கு பொருந்தாது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிக்கை பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை கொண்டுவந்துள்ளது.
ஒரு நாட்டை மட்டும் வித்தியாசமாக நடத்த வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை எச்சரித்தது.
சில நிபுணர்களும் இந்த விதிவிலக்கு வேலைக்கு ஆகாது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, பிரான்சிலிருந்து பிரித்தானியா வருபவர்களும் இனி 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மீண்டும் பிரித்தானியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்க இடம் இல்லாதவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள தங்குமிடங்களில் தங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தனிமைப்படுத்துதல் எப்போதிருந்து அமுலுக்கு வரும் என்பது குறித்த திட்டமான திகதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.