ரஷ்யாவில் பெண் செவிலியர் ஒருவர் ஆண் மருத்துவமனை வார்டில், பாதுகாப்பிற்கான உடை அணிந்து, உள்ளே உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அது அந்நாட்டில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 4,990,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 324,990 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் எளிதாக மனிதர்களிடமிருந்து பரவுவதால், மருத்துவர்களின் பாதுகாப்பு உடையின் தேவை அதிகரித்து வருகிறது. ஒரு சில நாடுகளிகளில் PPE(பாதுகாப்பு உபகரணங்கள், உடைகள்) பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில், ஆண்கள் இருக்கும் வார்டில் பெண் செவிலியர் ஒருவர் பாதுகாப்பு உடை(PPE) அணிந்திருந்த போதும், உள்ளே உள்ளாடை மட்டுமே போட்டிருந்த புகைப்படம் அந்நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
Медсестре из Тулы, надевшей купальник под защитный костюм, сделали замечаниеhttps://t.co/4OMCvsiXPg
К медсестре инфекционного госпиталя в Тульской областной клинической больнице применено дисциплинарное взыскание после того, как она появилась перед пациентами в ку… #Тула #ТН pic.twitter.com/gNneemIGn9
— Тульские новости (@newstula) May 19, 2020
இது கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கும் வார்டில் நடந்ததா? என்பது குறித்து தெரியவில்லை.
இந்த புகைப்படம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த புகைப்படம் தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள Tula பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான Tula-வில் இருக்கும் தொற்று நோய்களுக்கான பிராந்திய Tula மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த புகைப்படம் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், சுகாதார அமைச்சகம் செவிலியரை கண்டித்ததுடன், அவர் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களை மீறியதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுகாதார(பாதுகாப்பு உடைகள்)உடைகளின் அவசியத்தை ஊழியர்கள் உணர வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் நினைவுபடுத்தியுள்ளது.
ஆனால், சமூகவலைத்தளங்களில், குறித்த செவிலியருக்கு ஆதரவே அதிகமாகி வருகிறது. அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
சுமார் 20 வயதிற்கு மேல் உள்ள அந்த செவிலியரின் தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல், இதற்கு உள்ளே ஆடை அணிந்தால், அது மிகவும் சூடாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
குறித்த செவிலியர் பகிரங்கமாக எதுவும் பேசவில்லை, அவருடைய இந்த உடை குறித்து நோயாளிகள் யாரும் புகாரளிக்கவில்லை என்பதால், அவரின் ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.