தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கணேஷ்குமார். டிப்ளமோ படித்துவிட்டு, துபாயில் வேலை செய்ய வேண்டும் என கனவோடு, கடந்த ஜனவரி மாதம் துபாய் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் காரணமாக, வேலை ஏதும் கிடைக்காமல், நண்பர்கள் அறையில் தங்கியிருந்த கணேஷ்குமாருக்கு திடீரென மஞ்சள்காமாலை தாக்கியுள்ளது.
இவரை அழைத்துச் சென்ற ஏஜென்ட்டும் தலைமறைவாக, மருத்துவ உதவி கிடைக்காமல் தவிக்கும் இவர் வெளியிட்ட காணொளி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
துபாய் நாட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டுநாடு திரும்ப காத்திருக்கும் இளைஞர் உதவிகரம் நீட்டுமா தூதரகம் ?
Publiée par Jahir Hussain sur Lundi 18 mai 2020
குறித்த காணொளி தீயாய் பரவியதையடுத்து இவரது தந்தை சில தகவல்களைக் கூறியுள்ளார். போடியில் உள்ள டெய்லர் கடையில் தினக் கூலிக்கு டெய்லர் வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.
மகன் கணேஷ்குமார் துபாயில் இருக்கிறான். போனில் பேசும்போது, `உடல்நிலை சரியில்லை, மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், சரியாகிவிடும்’ என கூறினான்.
ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் வெளியிட்ட காணொளி மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் மகனைப் பார்த்து துடிதுடித்துப் போயுள்ளனர்.
தனது நண்பர்களிடமும் தன்னைப் பற்றி பெற்றோர்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம் கணேஷ்குமார்.
இப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால், நான் அவனை துபாய் போக விட்டிருக்கமாட்டேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் மகனை மீட்டுக்கொடுங்கள். இல்லையென்றால், அவனுக்கு மருத்துவ உதவி கிடைக்க ஏதாவது வழி ஏற்படுத்திக்கொடுங்கள்” என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.
இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் இளைஞருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.