தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக சூரி திகழ்ந்து வருகிறார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் சூரி.
என்னதான் தற்போது சூரி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருந்தாலும் சினிமாவில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது, வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடி தான்.
ஆனால், உண்மையில் சொல்லப்போனால் சூரிக்கு பரோட்டா என்றாலே பிடிக்காதாம். அதனை விருது விழா ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சூரி,
உண்மையில் எனக்கு பரோட்டா என்றால் சுத்தமாக பிடிக்காது, ஆனால், பரோட்டா கபடி குழு படத்தில் இயக்குனர் என்னை 14 பரோட்டா சாப்பிட வைத்தார்.
அன்று பரோட்டா சாப்பிட்டதால் தான் இன்று என் குடும்பமே சாப்பிட்டு கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.