1989 அம் ஆண்டு இலங்கை அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முள்ளிக்குளத்தில் இருந்த தமது (புளொட்) அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சில விமர்சனங்களை சொல்லாமல் கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்து புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்களை உள்ளடக்கியதாக சிறிய அறிக்கை ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
1989 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி ஈழத்தமிழர் வரலாற்றில் வேதனைபட வேண்டிய நாளில் ஒன்று.
இலங்கை அரச படையினரின் உதவியோடு விடுதலை புலிகள் (LTTE) சகோதர இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினரின் (PLOTE) முள்ளிக்குளம் முகாம் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
விடுதலை புலிகளுக்கு உதவும் முகமாக அரச கடற்டையினர் கடலில் இருந்து கழகத்தினரின் முகாம் மீது எறிகணை தாக்குதலை ஆரம்பிக்க அதேவேளை புலிகள் முகாமினை சுற்றி வளைத்து தாக்கியிருந்தனர்.
புளொட் இயக்கமானது அந்த காலகட்டங்களில் மும்முனை தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
இந்திய அமைதி படையினர் (IPKF) கழக உறுப்பினர்களை கைது செய்து கொண்டிருந்தார்கள் மறுமுனையில் இலங்கை அரச படைகளும, புலிகளும் இணைந்து கொழும்பு, மற்றும் வட கிழக்கு பகுதிகளில் கழக உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் (The act of searching destroying) ஈடுபட்டு இருந்தார்கள்.
முள்ளிக்குளம் மீதான அரச படைகளின் உதவியுடனான புலிகளின் தாக்குதலை தோழர் கந்தசாமி தலையிலான கழக போராளிகள் எதிர்கொண்டு புலிகளுக்கு கடும் சேதத்தினைனை உண்டு பண்ணியிருந்தார்கள்.
இரண்டு நாளாக பல மணிநேரம் இடம் பெற்ற தாக்குதலில் தோழர் கந்தசாமி. வசந் உட்பட 20 பேர்வரையிலான கழக தோழர்கள் கொல்லப்பட்டனர். மிகுதி தோழர்களை அரச படைகள் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றிருந்தனர்.
அரச படைகளுக்கு சிம்ம சொற்பனமாக இருந்த தோழர் கந்தசாமியையும், கழகத் தோழர்களையும் புலிகள் இலங்கை அரசுடன் இணைந்தே கொன்றொழித்தார்கள்.
இதைப்பற்றிய செய்திகளை பத்திரிகை ஒன்றில் இருபக்கங்கள் முழுவதும் எழுதி, இராணுவ முகாமை வீழ்த்திய பெருமையுடன் இரு நாள் சமரில் வீழ்ந்தது எனக் குறிப்பிட்டு அக மகிழ்ந்தனர்.
சில விமர்சனங்களை சொல்லாமல் கடந்து செல்ல முடியாது. இத் தாக்குதல் நேரம் பல தோழர்கள் மாலதீவு சென்றமையால் பல உயிர்கள் இன்றும் இயங்குகின்றனர்.
வீரமரணமடைந்த பல தோழர்கள் , வட கிழக்கு மக்களை மட்டும் அல்லாது மலையக மக்களையும் நேசித்தனர். அங்கு சென்று அம்மக்களுடன் வேலை செய்தனர். காலம் கடந்து எம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்கள்.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்”
அனைத்து அடக்குமுறையையும் உடைத்தெறிவோம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.