துபாயில் மஞ்சள் காமாலையால் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படும் தமிழக கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ மனதை உருக்கியுள்ளது.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார். இவர் கடந்த ஜனவரி மாதம் துபாய்க்கு வேலை தேடி சென்றார்.
கொரோனா பரவல் சார்ந்த பொருளாதார பிரச்சினை காரணமாக துபாயில் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.
எனவே, நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் கணேஷ்குமாருக்கு, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது.
மருத்துவ உதவி கிடைக்காமல் இருப்பது மட்டுமில்லாமல், புற்றுநோய் அவருக்கு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக எதையுமே சாப்பிட முடியவில்லை, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டு தூதரகத்திற்கு சென்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டேன்.
ஆனால் இன்னும் நாடு திரும்ப முடியவில்லை . எப்படியாவது ஊருக்கு கொண்டு சென்று விட்டு விடுங்கள்.
https://twitter.com/BarisKhan16/status/1263114442927157248
அங்கே எனது அம்மா என்னை பார்த்துக் கொள்வார். கேரளாவில் விட்டு விட்டாலும் பரவாயில்லை. அங்கேயே இருந்து ஊருக்கு சென்று விடுகிறோம். வயிறு மிகவும் வலிக்கிறது. நீண்ட நேரம் உட்காரக்கூட முடியவில்லை.
நான் இரண்டு நாட்களில் இறந்துவிடலாம், அப்படி இறந்தால் சடலத்தையாவது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்த கணேஷ்குமார் பெற்றோர், தனது மகனுக்கு, மருத்துவ உதவி கிடைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கணேஷ்குமார் போடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இந்த விடயத்தில் உடனடியாக உதவ பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.