அமெரிக்காவில் சிறார்களை தாக்கும் கொரோனா தொடர்பான விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாம் அனுபவித்த வலிகள் தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியை சேர்ந்தவர் 14 வயதான ஜாக் மெக்மரோ. ஏப்ரல் மத்தியப் பகுதியில் இவரது கைகளில் ஒருவகை சிராய்ப்புகள் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கவலை கொள்ளாத ஜாக், தமது பெற்றோர்களிடம் கூட தெரிவிக்கவில்லை. இருப்பினும் கொரோனாவால் தற்போது அடிக்கடி கை கழுவும் நிலை இருப்பதால், அதனால் ஏற்பட்ட ஒவ்வாமையாக இருக்கலாம் என கருதியுள்ளார்.
மட்டுமின்றி அதிக நேரம் கணினியில் செலவிடுவதை வழக்கமாக கொண்டார். இதனிடையே ஜாக் வயிற்று வலி மற்றும் குமட்டலால் அவதிக்குள்ளானார்.
மட்டுமின்றி, ஜாக் வழக்கமாக சாப்பிடுவதையே நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டார். இறுதியாக அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
பத்து நாட்கள் வரை இதே நிலை நீடித்தது மட்டுமின்றி, நிலைமை மோசமாகவும் மாறியது. கூடவே வரட்டு இருமலும், சுவை அறியாத நிலையும் ஏற்பட்டது.
திடீரென்று ஒரு நாள், சிறுமி ஜாக்கால் நகரவே முடியாத நிலை ஏற்பட்டது. அடித்து நொறுக்கியது போன்ற வலி. மட்டுமின்றி யாரோ நெருப்பள்ளி உடம்புக்குள் கொட்டியது போன்ற நிலை.
பதறிப்போன குடும்ப மருத்துவர், உடனடியாக வெயில் கார்னெல் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளார்.
ஆபத்தான நிலையில் குறைந்த இரத்த அழுத்தம், வேகமாக துடிக்கும் இதயம் மற்றும் 40 டிகிரிக்கு மேல் காய்ச்சலுடன் ஜாக் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொடர்பான பரிசோதனையில் அவருக்கு முதலில் இல்லை என தெரியவந்தது. மறுபடியும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மட்டுமின்றி சிறுமி ஜாக்கின் இதயம் சிறிதாக செயலிழக்க தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து மோர்கன் ஸ்டான்லியின் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிறுமி ஜாக்கின் அதே அறிகுறிகளுடன் அந்த மருத்துவமனையில் பல சிறார்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தனர்.
ஒருவார காலம் ஜாக் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மட்டுமின்றி செயற்கை சுவாசமும் வழங்கப்பட்டது.
அவரது உடம்பு மருந்துகளை ஏற்ற்க்கொள்ள துவங்கியதும் சாதாரண அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் ஒருவார காலம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பின்னர் ஜாக் குடியிருப்புக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும் தொடர்ந்து மருந்துகளை எடுத்து வருகிறார். இதயம் தொடர்பான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.