லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது மாஸ்டர் படம். விஜய் சமீபகாலமாக இசைவெளியீட்டு மேடைகளில் சொல்லும் குட்டிக்கதையை மையமாக வைத்து இந்தப் படத்தில் குட்டி ஸ்டோரி என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்க, அனிருத் இசையமைத்து விஜய் பாடினார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் பாடலை வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாடி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னதாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பலரும் நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டு வந்தனர். அதில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியிருந்தது.
#Thalapathy @actorvijay ‘s #KuttyStory song going viral.. As people in foreign lands make videos about it.. pic.twitter.com/984EQu3GGn
— Ramesh Bala (@rameshlaus) May 22, 2020
மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகும் போது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.