யாழில் இளம் பெண் சட்டத்தரணியொருவருடன் இராணுவத்தினர் முறையற்ற விதமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் இந்த சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணி மணிவண்ணனின் இளநிலை சட்டத்தரணியான பெண்ணொருவர் சம்பவ தினம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது இராணுவத்தினர் அவரை வழிமறித்தனர்.
தனது மூத்த சட்டத்தரணியிடம் கடமை தொடர்பாக சென்றுவிட்டு வருவதாக தெரிவித்தபோது, அவரது கைப்பையிலுள்ளவற்றை நிலத்தில் கொட்டி சோதனையிட்ட இராணுவத்தினர், வெறும் கைப்பையை கொடுத்து, பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
எனினும், பொருட்களை எடுக்காமல் அந்த சட்டத்தரணி சென்றுள்ளார்.