இதையடுத்து, நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கார் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பெண்ணின் கணவனும், அந்தப் பகுதி இளைஞர்களும் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற இளைஞர்கள் இருவரும், பெண்ணிற்கு அழைப்பேற்படுத்தி தாம் காத்திருக்கும் விடயத்தை தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இடமொன்றிற்கு அவர்களை வருமாறு பெண் கூறியதையடுத்து இருவரும் அங்கு சென்றனர்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த இளைஞர்கள், காரில் வந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து, கட்டி வைத்து நையப்புடைத்துள்ளனர். இதில் அவர்கள் கடுமையான காயமடைந்தனர்.
பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் இளைஞர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
இருவரையும் விசாரணை நடத்திய பொலிசார், இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.