வடகொரியாவின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், கிம் ஜாங் வுன் மேற்கொள்ளும் ஆயுத சோதனைகளுக்கு நிதி திரட்டவும் பயன்படுத்தப்படும் அமைப்பு இந்த அறை எண் 39.
இந்த அமைப்பின் முழு பொறுப்பும் கிம் ஜாங் சகோதரி கிம் யோ மற்றும் அவரது கணவருக்கு மட்டுமே என கூறப்படுகிறது.
அறை எண் 39 என அறியப்படும் இந்த அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் போலியான பொருட்களை களமிறக்குவதையே பணியாக செய்து வருகிறது.
அதன் மூலம் ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 1.6 பில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.
போதை மருந்து, போலி பணத் தாள்கள் தயாரிப்பது, தங்கம் கடத்துவது உள்ளிட்ட பணிகளில் இந்த அறை எண் 39 அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
சாத்தியமான எந்த வகையிலும் பணத்தை திரட்டுவதற்கான ஒரே நோக்கத்துடன் இந்த அறை எண் 39 அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தங்கம் கடத்துதல், போலி வயக்ரா மற்றும் பெரிய அளவிலான மெத் மற்றும் ஹெராயின் உற்பத்தி ஆகியவை இந்த அமைப்பால் முன்னெடுக்கப்படும் பல சட்டவிரோத முறைகளில் அடங்கும்.
சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு உரிமையாளரான கிம் ஜாங் வுன், சொந்தமாக தீவு ஒன்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
சொகுசு ரயிலை மட்டுமே நம்பியுள்ள கிம் ஜாங் வுன், தமது மாளிகைக்கு அடியில் தனிப்பட்ட ரயில் நிலையம் ஒன்றையும் அமைத்துள்ளார்.
ஆடம்பர படகு ஒன்றும் கிம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி கிம் ஜாங் கார் உள்ளிட்ட வாகனங்களை பொதுவாக பயன்படுத்துவதில்லை என்றாலும், விலையுயர்ந்த கார்களின் வரிசை ஒன்றும் கிம் ஜாங் பராமரித்து வருகிறார்.
நாட்டின் 60 சதவீத மக்கள் ஏழ்மையில் வாழ்ந்து வந்தாலும், கிம் ஜாங் குடும்பத்தினரும் அவரை சுற்றியுள்ள அதிகார வர்க்கமும் மட்டும் செல்வ செழிப்புடன் காணப்படுகிறது.
அறை எண் 39 வழியாக உலகின் ஆனைத்து வசதிகளையும் கிம் ஜாங் வுன் அனுபவிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
1970 முதல் செயற்பாட்டில் இருக்கும் இந்த அறை எண் 39, உலக நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து வடகொரியாவை மீட்கவே உருவாக்கப்பட்டதாகும்.
போதை மருந்து விற்பனை, ஆயுதம் மற்றும் போலி பணத்தாள்களில் இருந்து கோடிகள் சம்பாதிக்கின்றனர்.
வடகொரியாவில் தயாராகும் போதை மருந்துக்கு ஜப்பான், சீனா மற்றும் பிற ஆசியா நாடுகளில் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2003 ஆம் ஆண்டு சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்து குவியலை வடகொரிய கப்பலில் இருந்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றினர்.
2005 ல் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், வடகொரியாவில் இருந்து தயாரான போலி வயாக்ரா மாத்திரைகள் மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் ஹொங்ஹொங் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் இருந்ததாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவில் இருந்து தயாராகும் போலி 100 டொலர் தாள்களை இதுவரை எவரும் கண்டுபிடித்ததில்லை என கூறப்படுகிறது.
2001 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் வடகொரியாவின் போலி 100 டொலர் தாள்கள் சுமார் 82 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு புழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் பெற்றுத் தந்துள்ளது.
இந்த மாத துவக்கத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பிரான்ஸ், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் புழக்கத்தில் விடப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை என கண்டறியப்பட்டன.