பாகிஸ்தானில் 91 பயணிகளுடன் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய Airbus A320 விமானத்தின் விமானி கடைசியாக உதவிக்கு கோரிய ரேடியோ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமானது கராச்சி விமான நிலையத்தை இறுதியாக நெருங்கும் நிலையில் மாடல் காலனி அருகே ராடாரில் இருந்து மாயமானது.
கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரை நோக்கி குதிக்கும் நிலையில், விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இயந்திரம் பழுதடைந்துள்ளது, நேரடியாக நாங்கள் விமான நிலையம் நோக்கி விரைகிறோம், உதவுங்கள் என அவர் கடைசியாக பேசியுள்ளார்.
விமானியிடம் இருந்து சில்லிட வைக்கும் அந்த தகவல் கிடைத்ததும், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளது எனவும், விமானம் தரையிறங்க தடையில்லை எனவும் பதில் அளித்துள்ளனர்.

விமானம் விபத்துக்கு உள்ளாகும் முன்னர் 2 அல்லது 3 முறை தரையிறங்க முயன்றதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 37 பேர் இந்த விபத்தில் சிக்கி கொல்லப்பட்டதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
ரடாரில் இருந்து மாயமாகும் முன்னர், விமானத்தில் கோளாறு இருப்பதாக குறித்த விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.