முல்லைத்தீவு மருதமடுகுளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான பிரதீப்குமார் வளர்சிகன் (20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த இளைஞர் கடந்த வருடம் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சித்தியடைந்த பல்கலைகழக புகுமுக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.