கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வந்திருந்த கடற்படையைச் சேர்ந்த 10 பேருக்குஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ் சுகந்தன் தெரிவித்தார்.
அண்மையில்கடற்படையைச் சேர்ந்த 250 நபர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை முகாமிலும் 149 பேர் இராணுவ முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களில் 99 பெயருக்கான பரிசோதனைகள் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றது.
பரிசோதனையின் பின்னர் அவர்களில் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து , அவர்கள் வெலிகந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் 40 பேருக்கான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.