யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை கோப்பாய் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் ,அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
இந்த நிலையில் குறித்த மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.