என்னை அவர்களுக்கு பிடித்திருந்ததால் என்கூட ஜாலியா இருந்தாங்க… நானாக போய் அவர்களை ஏமாற்றவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார் காசி.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் காசி, இதை தவிர நில மோசடி, கந்துவட்டி புகார்களும் குவிய தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவரை காவலில் எடுத்துள்ள பொலிசார் மூன்று நாள் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
இந்த 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது.. போலீசாருக்கு சரியான முழு ஒத்துழைப்பும் தரவில்லை..
ஒவ்வொரு வார்த்தையையும் காசியிடம் இருந்து பிடுங்குவதற்கே பொலிசார் படாதபாடு பட்டதாக கூறப்பட்டது.
காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.
இதையெல்லாம் விசாரிக்கவும், காசியுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விசாரிப்பதற்காக பொலிசார் நாகர்கோவில் கோர்ட்டில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படியே, இப்போது 2-வது முறை 6 நாட்கள் பொலிஸ் காவலில் விசாரணை துவங்கியது. நேற்றுமுன்தினம் முதல்விசாரணை நடந்தது. வழக்கம்போலவே இந்த 2 நாளிலும் காசி வாயை தொறக்கவே இல்லையாம்.
லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்களை காட்டி, இவர்கள் எல்லாம் யார் என்று கேட்டனர்.. அதேபோல பென்டிரைவரில் உள்ள நிர்வாண வீடியோ, போட்டோக்களையும் காட்டி அந்த பெண்கள் குறித்து விசாரித்தனர்.. அதை பார்த்த உடனேயே காசிக்கு குஷி வந்துவிட்டதாம்.. இவர்கள் எல்லாம் என்கிட்ட பழகியவர்கள் என்றாராம்.
பெண்களின் விவரம் குறித்து கேட்டதற்கு, ‘எத்தனையோ பெண்கள் என்கிட்ட ஜாலியா பழகி இருக்காங்க.. அதெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது..
ஆனால் நானா போய் யாரையும் ஏமாத்தல.. என்கிட்ட வந்தவர்கள்கிட்ட நான் ஜாலியா இருந்தேன்.. கொஞ்சம் பண தேவை இருந்தது.. அதனால் சில பெண்களின் நட்பை பயன்படுத்தி கொண்டேன்..அதுக்குன்னு கல்யாணம் பண்ணி எந்த பொண்ணையும் நான் ஏமாத்தல.
என் பேச்சு, என் உடம்பு அவங்களுக்கு பிடிச்சிருந்தது.. அதை பார்த்து என்கிட்ட விழுந்துட்டாங்க. ஆனால் தேவையில்லாமல் என் மேல் யார் கம்ப்ளைண்ட் பண்ணாங்களோ அவங்களை கூப்பிட்டு முதல்ல கேளுங்க, நானா அவங்களை ஏமாத்தினேன்னு” என்று பதிலளித்தாராம் காசி.