கடந்த 2014ம் ஆண்டில் வெளிவந்த காக்கா முட்டை படத்தினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் சாதனையும் படைத்தது.
இதில் நடித்த சிறுவர்களின் நடிப்பினை இன்றும் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்ததோடு, படத்தில் அம்மாவாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றுக்கொண்டது.
இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டையாக நடித்த விக்னேஷ், காக்கா முட்டை படத்திற்கு பின்னர் அப்பா, அப்பா 2,அறம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விக்னேஷ்ஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
அதில் பெரிய காக்கா முட்டையா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறியுள்ளார். காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தை விட ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்க முட்டை தான்.
சின்ன காக்க முட்டையாக நடித்த ரமேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவில்லை . காக்கா முட்டை படத்திற்கு பின்னர் சின்ன காக்கா முட்டையாக நடித்த ரமேஷ்ஷை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.