ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் தளர்த்தப்பட்டு வரும் பின்னணியில் கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக கூடிய அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை நாடு என்ற வகையில் வெற்றிகரமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி இருந்தாலும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மேலும் காலம் செல்லும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுமையான திறக்கப்பட்டாலும் சமூக இடைவெளி, கைகளை கழுவுதல், சன நடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிதல் என்பவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காணும் நோக்கில் இதுவரை 53 ஆயிரத்து 92 பேரிடம் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 998 PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.