நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் அருகே திங்களன்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் நிலநடுக்கத்தை அடுத்து சேதம் ஏற்பட்டதாக உடனடியாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
தலைநகர் வெலிங்டன் அருகாமையில் மூன்று முறை மிதமான நிலநகடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே 5.8 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
வெலிங்டன் நகரத்தின் அவசர சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி சேதம் தொடர்பில் உடனடியாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் வெலிங்டனில் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகள் பலமாக குலுங்கியதை மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனாவில் இருந்து மெதுவாக மீண்டு வரும் நிலையில், இது கண்டிப்பாக தேவையில்லை என நிலநடுக்கம் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார் நிதியமைச்சர் Grant Robertson.
2011 ஆம் ஆண்டு 185 பேரை பலிவாங்கிய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து கிறிஸ்ட்சர்ச் நகரம் தற்போது மெதுவாக மீண்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டில், தென் தீவு நகரமான Kaikoura-வில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இருவர் கொல்லப்பட்டதுடன் வெலிங்டன் உட்பட்ட பகுதிகளுக்கு பல பில்லியன் டொலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.