சுவிட்சர்லாந்தின் ஜூரா மண்டலத்தில் நீண்ட 200 ஆண்டுகளுக்கு பின்னர் golden eagle எனப்படும் ஒருவகை கழுகு தென்பட்டதாக பறவையியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூரா பிராந்தியத்தில் இந்த கழுகு மனிதர்களின் பார்வையில் பட்டு நீண்ட 200 ஆண்டுகள் ஆகியுள்ளதாக கூறுகிறார் பறவையியலாளர் Martial Farine.
மீண்டும் அந்த பறவையை கண்களால் காண்பது ஒரு உணர்ச்சி மிகுந்த தருணம் என கூறும் அவர், இதுவரை ஆல்ப்ஸ் பகுதியில் இடம்பெயர்ந்த இந்த கழுகு இனி ஜூரா பகுதியில் அடிக்கடி காணக்கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட 200 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட இந்த கழுகு தற்போது ஜூரா பிராந்தியத்தில் முதன் முறையாக தென்பட்டதை தாம் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் Martial Farine தெரிவித்துள்ளார்.
Vallée du Doubs பகுதியில் அதுபோன்ற இரண்டு கழுகுகளை தாம் பார்த்துள்ளதாக கூறும் Farine, தொடர்ந்து பல நாட்களாக குறிப்பிட்ட பகுதியில் அவை உணவுக்கு வேட்டையாடுவதை கண்டதாக கூறியுள்ளார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூரா பிராந்தியத்தில் பரவலாக காணப்பட்ட இந்த golden eagle, மனிதர்களின் நடவடிக்கையாலையே இங்கிருந்து ஆல்ப்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்தன.
தற்போது மீண்டும் அவை ஜூரா பகுதிக்கு திரும்பியுள்ளன. அவை இங்கேயே தங்கிவிடுமா அல்லது மீண்டும் ஆல்ப்ஸ் பகுதிக்கு திரும்புமா என்பது உறுதிபட கூற முடியாது என்கிறார் பறவையியலாளர் Martial Farine.
ஆனால் உணவுச்சங்கிலி மிக மோசமாக மாறியுள்ள காரணத்தாலையே அவை ஜூரா பகுதிக்கு திரும்பியுள்ளதாக பெர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.