சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, நாளை (26) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நீக்கி, முகக்கவசங்கள் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளி பேணுதல் ஆகியவை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.