ஆந்திரப் பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தம்மடப்பள்ளி என்ற கிராமத்தில் அங்கு 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென புகுந்து கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் பாம்பு புகுந்த தகவலால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பு பிடி வீரர் ஒருவருடன் பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
15 அடி நீளம் என்பதால் பாம்பைப் பிடிப்பதில்பல மணி நேரம் சிக்கல் நிலவிவுள்ளது. அது மிகவும் ஆக்ரோஷமாகக் காணப்பட்டதால், நொடிக்கு நொடி பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் பாம்பைப் பிடித்த பின்பு தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். பின்பு ராஜநாகம் அடர்ந்த செருக்குப்பள்ளி வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இதேவேளை, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த வனப் பகுதியில் மட்டுமே வாழும் இந்த ராஜநாகம் உலகிலேயே கொடிய விஷம் கொண்ட பாம்பு வகைகளில் ஒன்றாகும்.
காடுகளில் அழித்தல் மற்றும் காலநிலை மாறுபாடு போன்ற காரணங்களால் அவ்வப்போது ஊருக்குள் ராஜநாகங்கள் புகுந்து விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.